உலகத் தலைவர்கள் தொழி லதிபர்கள் ஆர்வலர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனை வரும் காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் 28 வது மாநாட்டில் கூடுகின்றனர். ஐக்கிய நாடுகள் காலநிலை கட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ள குறைந்தபட்சம் 190 நாடுகளை தங்கள் பொருளாதாரங்களை புதை படிவ எரிபொருட்களில் இருந்து விலகச் செய்ய இன்னும் ஒரு முயற்சி இதில் நடக்கும்.
மனிதகுலம் பெரியவிலை தர வேண்டும்
உலகின் வெப்பநிலையை தொழில்துறைக்கு முந்தைய நிலையை விட 1.5 டிகிரிக்கு மேல் அதிகமாகாத வகையிலும் குறைந்தபட்சம் அதைவிட 2 சதவீதம் டிகிரி குறைவாகவும் இருக்க வேண்டும் என்ற 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் மாநாடு எட்டிய கூட்டு உறுதிப்பாட்டை நிறைவேற்றுவது தான் தற்போதைய குறிக்கோள்.இந்த வரம்புகள் மீறப்பட்டால் மனிதகுலம் ஒரு பெரிய விலையை தர வேண்டியதாக இருக்கும் என்று அந்த நாடுகள் ஏகமானதாக ஒப்புக் கொண்டன .
அனைத்து பெரிய பொருளாதார வல்லரசு நாடுகளும் தாங்கள் அதற்காக எப்படி திட்டமிடுகிறோம் என்று பெரிதாக விளம்பரப்படுத்தினாலும் 2021-22 லிருந்து ஆண்டுதோறும் உமிழ்வு 8 சதவீதம் குறைக்கப்படவில்லை. அதற்கு மாறாக 1.2 சதவீதம் அதிகரித்து வருவதைத் தான் விஞ்ஞான தரவுகள் நிரூபிக்கின்றன. இந்த விகிதத்தில் சென்றால் நூற்றாண்டின் இறுதியில் உலகம் 2.5 முதல் 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பமடையும். இந்த ஆண்டு மட்டும் 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை கடந்து உலக வெப்ப நிலை அதிக மாகிய 86 சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன.
30 வருடங்கள்; 3 அம்சங்கள்\
கடந்த 30 வருடங்களாக நடந்த இந்தக் கூட்டங்களில் மூன்று அம்சங்களை முக்கிய வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன. இருபதாம் நூற்றாண்டில் மிக வேகமாக வளர்ந்துள்ள தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் அவர்களுடைய மக்கள் தொகை எண்ணிக்கைக்கு மாறான விகிதத்தில் அதிகமான கார்பனை வெளியேற்றியுள்ளன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தியாகும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை விட புதை படிவ எரிபொருள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை குறைவாக இருந்தாலும் உலகில் அது பேரழிவை ஏற்படுத்துவதாகும்.
குறைந்த தொழில்துறை உள்கட்ட மைப்பைக் கொண்ட வளரும் நாடுகள் இன்று தங்கள் பொருளாதாரத்தை வளர்த்திட தூய்மையான புதை படிவமற்ற எரிபொருள் ஆதாரங்களை பயன்படுத்துவதற்காக அவர்களுக்கு சேதம் மற்றும் இழப்பீடு நிதி வழங்கப்பட வேண்டும். காலநிலை பேரழிவு களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தும் உள்ளது. அரசாங்கங்கள் அவர்கள் நாட்டுக்குள் எதிர்கொள்ளும் பரஸ்பர சந்தேகம்.
இரண்டு சிக்கல்கள்
உலகமயத்திலிருந்து விலகி தங்கள் நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற பாது காப்பு உணர்வு, அரசியல் பழிவாங்கும் நட வடிக்கைகள் போன்றவற்றால் இந்த கொள்கைகளை அமல்படுத்துவது கடின மாகி வருகிறது. இதே கருப்பொருட்கள் இந்த ஆண்டும் விவாதத்திற்கு வரும்.எப்படி இருந்தாலும் இரண்டு சிக்கல்கள்: உலகளா விய பரிசீலனை மற்றும் சேதம் குறித்த இழப்பீட்டு நிதி இரண்டும் மையப் பொருளாக நீடிக்கும்.
இருப்பினும் நிதியின் அளவு மற்றும் தங்கள் நாடுகளின் தனிப்பட்ட பங்களிப்புகள் குறித்து தெளிவு எதுவும் இல்லை. மாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் தங்கள் பங்களிப்பு குறித்து சுய பாராட்டு தெரிவிக்கும் நிலை யில் ஒப்பந்தங்களை அமலாக்கும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதை பார்க்கலாம். காப் 28 மாநாடு கையொப்பமிட்ட அனைத்து நாடுகளையும் உறுதியான நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தும் மாநாடாக அமையட்டும். அதன் இலக்கை அடைந்திட பாடுபடட்டும்.
இந்து தலையங்கம் 29-11-23
- தமிழில்: கடலூர் சுகுமாரன்